ஐபிஎல் ஏலம் 2019: அதிக கவனம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

1

ஐபிஎல் ஏலம் 2019: அதிக கவனம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

13வது இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஏலத்தில் எடுக்க மொத்தம் 332 வீரர்கள் உள்ளனர். அதில் 186 பேர் இந்திய வீரர்கள்; 143 பேர் வெளிநாட்டு ஆட்டக்காரர்கள்.

ஐசிசியின் முழு உறுப்பினர் ஆகாத நாடுகளின் அணிகளை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் இந்த ஏலப்பட்டியலில் அடங்குகின்றனர்.

கவனம் பெறும் கிரிக்கெட் வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

ஏழு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரூபாய் 2 கோடியை தங்களின் அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயித்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கும்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹாஸ்லிவுட்டும் அடங்குகின்றனர்.

மனநலம் தொடர்பான சிக்கல்களால் சிறியதொரு இடைவெளி எடுத்துக்கொண்டு வந்துள்ள கிளென் மேக்ஸ்வெல் ஏலத்தொகையை அதிகரித்து கோடிக்கணக்காக சம்பாதிக்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த கிரிஸ் லிணும் இந்த ஏலத்தில் பங்கேற்கிறார்.

ஆல்ரவுண்டரான மிட்ச்செல் மார்ஷ் இந்த ஐபிஎல்-யிலில் விளையாட விரும்பம் தெரிவித்திருந்தாலும், அவரது உடல் தகுதியும், சர்ச்சைக்குரிய நடத்தையும் இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

அஸ்வின்

ஐபிஎல்-யில் மீண்டும் விளையாட அனுபவம் மிக்க ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டாலே ஸ்டென் ஆர்வமாக இருக்கிறார். முன்னதாக, டெக்கான் சார்ஜஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இவர் விளையாடியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஏஞ்சலோ மேத்யூ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறார். ஆனால், அவரது உடல் தகுதி அணிக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம்.

பழைய வீரர்கள் மதிப்பு மிக்கவர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களான ராபின் உத்தப்பா, பியுஷ் சாவ்லா, யுசுஃப் பதான் மற்றும் ஜெய்தேவ் உனாட்காட் அடிப்படை ஏலத்தொகையை அதிகமாக அதாவது ஒன்றரை கோடியாக நிர்ணயித்துள்ளனர்.

உத்தப்பா மற்றும் சாவ்லா கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். யுசுஃப் பதானை விலக்க ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் அணி முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

இளம் கிரிக்கெட் வீரர்கள்

19 வயதினருக்கு கீழான கிரிக்கெட் போட்டியிலும், உள்ளூர் போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்-யில் விளையாட தயாராகி வருகிறார்கள்.

விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பாய்கார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். இவரையும், ஆக்ரோஷமாக அடித்து ஆடுபவராக அறியப்படும் யாஷாஷ்வியையும் சேர்த்துகொள்ள பல அணிகள் காத்திருக்கின்றன.

 

அடுத்த ஆண்டு 19 வயதினருக்கு கீழான இந்திய கிரிகெட் அணிக்கு பிரியம் கார்க் கேப்டனாக இருப்பார். ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த இளம் கிரிக்கெட் வீரரை சேர்த்துகொள்ள ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டுகின்றன.

அதிக ஆர்வத்தோடு பியாஷ் ராய் பர்மன் கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் சேர்த்துகொள்ளப்பட்டார். ஆனால், கடந்த ஐபிஎல் போட்டிகளுக்கு பின்னர் இந்த அணி தனது முடிவை மாற்றியுள்ளது. எனவே இவரும் ஏலப்பட்டியலில் உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக விளங்கும் புஜாரா, ஆல்ரவுண்டர் ஹனுமா விகாரி, பந்துவீச்சாளர் மோகித் ஷர்மா, ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா மற்றும் பேட்ஸ்மன்கள் ராகுல் திரிபாதி, விராட் சிங் ஆகியேர் இந்த ஆண்டு அதிக கவனம் பெறும் கிரிக்கெட் வீரர்களாகும்.

வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரெல் தொடர்ந்து நன்றாக விளையாடி, விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது பெயரும் இந்த ஏலத்தின்போது முன்னிலை பெறுகிறது.

கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் பல ஆண்டுகளாக இருந்த டேவிட் மில்லர், இந்த ஆண்டு எலப்பட்டியலில் உள்ளார். பந்தை வேகமாக அடித்து ஆடுவதற்கு புகழ்பெற்ற மில்லர், சிறந்த பீல்டரும் ஆவார். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஷிம்ரோன் ஹெட்ம்யர் இந்த ஏலத்தின்போது சிறந்த கவனம் பெறுபவராக இருப்பார்.

இந்த ஏலம் குறுகிய காலத்திற்குதான் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் மாற்றியமைக்கப்படலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

யாரிடம் அதிக பணம் உள்ளது? எத்தனை கிரிக்கெட் வீர்ர்களை அவர்கள் வாங்கலாம்?

அணிகள் செலவழித்த தொகை (ரூபாயில்) மீதியிருக்கும் தொகை (ரூபாயில்) எத்தனை கிரிக்கெட் வீரர்களை கொண்டுள்ளனர்? எத்தனை கிரிக்கெட் வீரர்கரளை வாங்கலாம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 57.10 கோடி 27.90 கோடி 13 12
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 49.35 கோடி 35.65 கோடி 14 11
கிங்ஸ் XI பஞ்சாப் 42.30 கோடி 42.70 கோடி 16 9
சென்னை சூப்பர் கிங்ஸ் 70.40 கோடி 14.60 கோடி 20 5
டெல்லி கேப்பிடல்ஸ் 57.15 கோடி 27.85 கோடி 14 11
ராஜஸ்தான் ராயல்ஸ் 56.10 கோடி 28.90 கோடி 14 11
மும்பை இந்தியன்ஸ் 71.95 கோடி 13.5 கோடி 18 7
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 68 கோடி 17 கோடி 18 7

ஏலம் விடுவதற்கு முன்னரே சில கிரிக்கெட் வீரர்கள் அணிகளுக்கு இடையில் மாறி சென்றுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

அணிகள் மாறியுள்ள கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் வீரர்கள் முந்தைய அணி புதிய கிரிக்கெட் அணி
ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ்
ரவிசந்திரன் அஸ்வின் கிங்ஸ் XI பஞ்சாப் டெல்லி கேப்பிடல்ஸ்
ஜெகதீஷ் சுசிட் டெல்லி கேப்பிடல்ஸ் கிங்ஸ் XI பஞ்சாப்
டிரென்ட் போல்ட் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ்
கிருஷ்ணப்பா கௌதம் ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் XI பஞ்சாப்
அன்கிட் ராஜ்புட் கிங்ஸ் XI பஞ்சாப் ராஜஸ்தான் ராயல்ஸ்
தவால் குல்கார்னி ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ்
அஜின்க்யா ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ்
ராகுல் டெவாட்டியா டெல்லி கேப்பிடல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்
சித்தேஷ் லாட் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மாயங்க் மார்க்கண்டே மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை வெற்றி பெற்ற அணிகள்

ஆண்டு அணிகள்
2008 ராஜஸ்தான் ராயல்ஸ்
2009 டெக்கன் சார்ஜர்ஸ்
2010 சென்னை சூப்பர் கிங்ஸ்
2011 சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 கொல்கத்த நைட் ரைடர்ஸ்
2013 மும்பை இந்தியன்ஸ்
2014 கொல்கத்த நைட் ரைடர்ஸ்
2015 முப்பை இந்தியன்ஸ்
2016 சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2017 மும்பை இந்தியன்ஸ்
2018 சென்னை சூப்பர் கிங்ஸ்
2019 மும்பை இந்தியன்ஸ்
1 Comment
  1. KeytExoth says

    Cialis Generika Ajanta https://cheapcialisir.com/# – safe place to buy cialis online Side Effects From Cephalexin cialis generic name Viagra Kaufen Holland Rezeptfrei

Leave A Reply

Your email address will not be published.