தி.மு.க கட்சியின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு…

0

புதன்கிழமையன்று காலையில் கொரோனா நோய் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக தி.மு.க. நடத்தவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து அந்தக் கூட்டத்தை காணொலிக் காட்சிமூலம் நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்துஅனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை புதன்கிழமை காலையில் – ஏப்ரல் 15ஆம் தேதி – அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்தது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், தேனாம்பேட்டை காவல்துறையினர் இந்தக் கூட்டம் தொடர்பாக தகவல்களைக் கேட்டனர். இதற்குப் பிறகு இந்தக் கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

இதையடுத்து இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் ஏப்ரல் 16ஆம் தேதி நடத்தவிருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறை மூலம், அ.தி.மு.க. அரசு நோட்டீஸ் கொடுக்க வைத்தது.தனிமனித இடைவெளி விட்டு, அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும்திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டும் – சென்னை மாநகர காவல்துறை, தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது.

கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அ.தி.மு.க. அரசு பிடிவாதமாகச் செய்வது போல், ஜனநாயக நெறிகளுக்கு முரணானஅரசியல் செய்ய, திராவிட முன்னேற்றக் கழகம் சிறிதும் விரும்பவில்லை” என்றுகூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.