பிரான்சில் உள்ளிருப்பு தொடர்பான முறைப்பாடுகளை நிறுத்துங்கள் – பாரிஸ் 20 நகர பிதா.

0

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை யார் மீறினாலும், தேசிய காவல் துறையினருக்கோ, அல்லது மாநகர காவல் துறையினருக்கோ உடனடியாக அறிவிக்கும்படி, Île-de-Franceசின் (Essonne) பகுதியான 91 வது மாவட்டத்தின் மொன்ஜெரோன் (Montgeron) நகரத்தின் நகரபிதா, Sylvie Carillon பொதுமக்களை கோரியிருந்தார்,

ஆனால், தற்போது 17 எனும் அவசர இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு அளிக்கவேண்டாம் என பாரிஸ் 20 ஆம் வட்டார நகர பிதா Frédérique Calandra கூறியுள்ளார்,  இவ்விடயம் பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில்.

கொரோனா வைரஸ் காரணமாக 17 எனும் அவசர இலக்கத்துக்கு வரும் அழைப்புக்கள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளன. அவற்றில் முறைப்பாட்டு அழைப்புக்களும் பதிவாகின்றன. பலர் இவ்விலக்கத்திற்கு அழைத்து, “உள்ளிருப்பை மீறுகின்றனர். கூட்டமாக இருக்கின்றது” என முறைப்பாடு தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில், 17 எனும் அவசர இலக்கம் மிக முக்கியமான மருத்துவ தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும். முறைப்பாடுகள் அளிக்கவேண்டாம். பலர் அழைப்புக்களை மேற்கொள்வதுடன், மின்னஞ்சல்கள் மற்றும் பலர் தங்கள் வீடுகளில் இருந்து சாளரம் வழியாக நிழற் படங்களை எடுத்து அதை காவல் துறையினருக்கு அனுப்பி வைக்கின்றனர் இச் செயல்களை நிறுத்துங்கள், வீதியில் பலர் சென்றால் அவர்களை கண்காணிக்க காவல் துறையினர் உள்ளனர். பொதுமக்கள் யாரும் முறைப்பாடு தெரிவிக்க வேண்டாம், இதனால் ஆபத்தில் உள்ள யாரோ ஒருவரின் அழைப்பு எடுக்க முடியாமல் போகின்றது” என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.