யாழ் சிறைச்சாலையில் 3 பேர் தனிஅறையில் வைக்கப்பட்டுள்ளனர் .

0

யாழ் சிறைச்சாலையில் 3 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் பணிப்பிற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

குறித்த 3 பேரும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து, இந்திய கடத்தல்காரர்களுடன் பழகி கஞ்சாவை பெற்றுவந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பருத்துறை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அவர்களை தனிமைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகரிகளிடம் மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர்கள் சிறைச்சாலையில் பிரத்தியேக இடமொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கு அடுத்த சில நாட்களில் இரத்த பாிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ..

Leave A Reply

Your email address will not be published.