நெருக்கடிகள் எவ்வாறு ஒரு முதல்வனை சிறந்த தலைவனா உருவாக்க முடியும்?

நிதானமா நின்னு ஆட்றாரு பினராயி விஜயன். புயல், மழை, வெள்ளம், தொற்று, வறட்சினு ஒவ்வொண்ணா தாண்டி இதோ கொரோனா போர்ல நிக்கிறாரு. முன் வரிசைல. முதல் வீரனா.

0

பினராயி விஜயன் மேல எப்பவுமே பெரிய மரியாத இருந்தது இல்ல. ஒரு ரவுடி பாலிடீசியனா மனசுல பதிஞ்சு போயிருந்தார்.

ஏன்னா, ஸ்காட் க்ரிஸ்டியன்ல படிக்கிற காலத்ல இருந்தே கேரளா பாலிடிக்சோட பரிச்சயம் உண்டு. SFI லீடரா, அப்றம் கண்ணூர் மாவட்ட செயலாளரா விஜயன் போட்ட ஆட்டம் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்.

இன்னொரு சிம்பிள் சீயெம்மா இருந்த அச்சுதானந்தனுக்கு இவர் குடுத்த குடைச்சல் கொஞ்ச நஞ்சம் இல்ல. காம்ரேடுகளே வெறுத்து போனாங்க.

கட்சில இருந்து ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் பண்ணப்பதான், பொலிட்பீரோலயும் சென்ட்ரல் கமிட்டிலயும் விஜயனுக்கு இருந்த செல்வாக்கு புரிஞ்சுது.

அவருக்குனு சொல்றத விட அவரோட no holds barred அப்ரோச்சுக்கு மேலிடத்ல இருந்த ஆதரவா பாக்றது பொருத்தம். ஒரு ஆக்ரோஷமான ரக்பி ப்ளேயரா விஜயனுக்கு மீடியா சித்திரம் கெடச்சுது.

இந்த பின்னணில அவர் சீயெம்மா தேர்வானது கொஞ்ச ஆச்சரியமும் அதிக அவ நம்பிக்கையும் குடுத்துது. அங்க உள்ள நண்பர்கள்ட்ட பேசும்போது, கவர்மென்ட் மிஷின் அவர தட்டி எடுத்து சரியாக்கிடும்னு சொன்னாங்க. நான் நம்பல.

சபரிமலை மேட்டர்ல விஜயன் அரசு எடுத்த நிலைப்பாடு என் அவநம்பிக்கைக்கு வலு சேத்துது. அதுக்கு பிறகுதான நேச்சர் விளையாட ஆரமிச்சுது. கடவுள்கூட ரக்பி ஆடி ஜெயிக்க முடியுமா.. அவுட் ஆக போறார் விஜயன்னு நெனச்சேன்.

நிதானமா நின்னு ஆட்றாரு பினராயி விஜயன். புயல், மழை, வெள்ளம், தொற்று, வறட்சினு ஒவ்வொண்ணா தாண்டி இதோ கொரோனா போர்ல நிக்கிறாரு. முன் வரிசைல. முதல் வீரனா.

அரசியல 100 சதவீதம் தூர வீசிட்டு களம் ஆடிகிட்டு இருக்காரு. காங்ரஸ் தொடங்கி RSS வரை அத்தனை எதிரிகளையும் அரவணைச்சு ஆலோசனை கேக்றாரு. மத்திய அரசு உதவிக்கோ வழிகாட்டலுக்கோ காத்திருக்கல. நிவாரணம் தரலயேனு திட்டல. உலகத்ல எங்கெல்லாம் வைரஸ் ஜெயிக்கலயோ அங்க என்ன செய்றாங்கனு கேட்டு தெரிஞ்சுக்றார்.

கண்டுபிடிக்காத மருந்துக்காக கைகட்டி காத்திருக்கல. உறுதியா தெரியாத மருந்த குடுத்து உயிரோட விளையாட விரும்பல. மூச்சு விட கஷ்டப்படாத அளவுக்கு உடம்புல நோய் எதிர்ப்பு சக்திய பலப்படுத்த என்ன செய்யணுமோ அத செய்ங்கனு டாக்டர்களுக்கு சுதந்திரம் குடுத்துட்டார்.

ஆயுர்வேத சிகிச்சை முறை கேரளால பிரசித்தம். மூச்சு விட சிரமமான்னு மோகன்லால் சும்மாவே எல்லா பாஷைலயும் நலம் விசாரிப்பார். பாரம்பரிய மருத்துவ அறிவை முழுமையா பயன்படுத்தி ஜனங்களோட இம்யூனிட்டிய பலப்படுத்தி மருந்தும் சிகிச்சையும் இல்லாமலே கொரோனாவ ஜெயிச்சுகிட்டு இருக்கு கேரளா.

இது நீடிக்குமா, இறுதி வெற்றி கிடைக்குமா அப்டீங்ற கேள்விக்கு எல்லாம் காலம்தான் பதில் சொல்ல முடியும். நெருக்கடிகள் எவ்வாறு ஒரு முதல்வனை சிறந்த தலைவனா உருவாக்க முடியும்? அப்டீங்ற கேள்விக்கு விஜயன் பதில் சொல்லிட்டார். வார்த்தைகள் இல்லாம.

வாழ்த்துக்கள் காம்ரேட்.

Kathir vel ..

Leave A Reply

Your email address will not be published.