கொரோனா பாதிப்பு..

0

பிரிட்டனில்
13 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்
கொரோனா வைரஸால் பிரிட்டன் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,279ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 861 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனி
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஜெர்மனியில் 3,380 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 1,33,830ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 1749 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 437 பேர் இதுவரை இந்தியாவில் இறந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் இந்த தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில்,
கொரொனா தொற்று நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த மதிப்பீட்டின்படி, 108,847 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன,

மொத்தம் மரணங்கள் 17,920 (மருத்துவமனைகளில் 11,060 மற்றும் வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட சமூக மற்றும் மருத்துவ-சமூக மையங்களில் 6,860).

இன்று ஏப்ரல் 16 வியாழக்கிழமை, மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 417 உயிரிழப்புக்களும், வயோதிப பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ-சமூக மையங்களில் 336 உயிரிழப்புக்களும் நிகழ்ந்தன. மொத்தம் 753

6,248 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தொடர்ச்சியாக 8 வது நாளாக குறைந்து வரும் எண்ணிக்கை. தீவிர சிகிச்சையில் இன்றைய எண்ணிக்கை 270 பேர் (-209) ஆபத்திலிருந்து மீள்பவர்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

தற்போது 31,305 பேர் மருத்துவமனையில் (24 மணிநேரத்தில் 1,823) அனுமதிக்கப்பட்டுள்ளனர். 32,812 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் (24 மணிநேரத்தில் 1,925).

Leave A Reply

Your email address will not be published.